அருள் செய்ய வேணும் அய்யா !

ஆனந்த பைரவி என்றொரு மலையாளப்படம் , சிறுபிள்ளை ஒருவன் யாரும் கற்பிக்காமலே இசைஞானம் பெற்று பெரும்பாடகனாக வலம் வரும்  கதை. மலையாள சினிமாவுக்கே உள்ள இயல்பும் அழகியலும், ததும்பி வழியும் சோக ரசமும்  நிறைந்த படம், அற்புதமான பாடல்கள் உள்ள படம்.

 நான் வேலூரில் இருந்தபோது - 60 வயதே நிரம்பிய எனது தோழர் ஒருவர், பாடல்களின் இனிமைக்காக கைகாட்டிய  படம் இது.  பாட்டு சொல்லித்தரும் பாகவதரிடம், தவறாக சொல்லிக்கொடுக்கிறார் என்று சக குழந்தைகள் முன் கிண்டல்செய்துவிட்டு வீட்டுக்கு ஓடிவந்துவிடுவான் சிறுவன் . பின் தன தந்தையிடம் அடிவாங்கியபடியே அவர் பாடிய "சமாஜ வர கமனா" பாடலில் உள்ள பிழையை சுட்டிக்காட்டுவான்.



 வியந்து போன பாகவதர் அவனது இசை அறிவை சோதிப்பதற்காக மேளகர்த்தா ராகங்கள் எத்தனை என்பது போன்ற கேள்விகளை கேட்பார், மழலை மொழியில் சரியான பதில்கள் வரும்.  இறுதியாக எழுபத்தி ரெண்டாவது மேளகர்த்தா ராகம் என்ன என்றவுடன் 'ரசிகப்ரியா' என்பான் குழந்தை, 'ஒண்ணு பாடு' என்று கேட்டவுடன் 'அருள்செய்ய வேண்டுமய்யா' என்ற பாடலை பாடுவான்.  அருமையான பாடல் அது. கோடீஸ்வர அய்யர் என்பவர்  இயற்றிய பாடல், அரிய ராகம். நெடுநாள் என் காதில் ரீங்கரித்துக்கொண்டிருந்த பாடல் இது.




கோடீஸ்வர அய்யர்


யூ டியூபில் தேடக் கிடைக்கிறது பாடல், வரிகள் இங்கே..


 பல்லவி


அருள் செய்ய வேண்டும் அய்யா,
அரசே முருகையா
நீ அருள் செய்ய வேண்டும் அய்யா

அனுபல்லவி 
 


மருள் உறவே என்னை மயக்கிடும் மாய

வல்லிருள் அறவே ஞான சூரியன் என வந்தோர் சொல்

சரணம் 
 


காரணம்

நிலைய காயம் இல்லையே இதனை

நிலையென்றுண்ணுவது என்ன மாயம்

நிலைஎன்றுன்னையே நினைந்து நான் உய்ய

நேச கவி குஞ்சரதாச ரசிகப்பிரிய 
 


Pallavi
aruL seyya vENDum ayyA(nI) arasE murugayya (nI aruL…)

My Lord (arasE), murugA (murugayyA) you (nI) have to shower (seyya vENDum) your grace (aruL) (on me)!

anupallavi
maruL uravE ennai mayakkiDum mAya
valliruL aravE jnAna sUriyan ena vandOr sol (aruL seyya…)

Please appear/come (vandu) like (ena) the sun (sUriyan) of knowledge (jnAna) (and bless me, Oh murugA) with a (Or) word (sol) [1] that will dispel (aravE) the deep darkness (valliruL) of illusion (mAya) intoxicating (mayakkiDum) and entangling (uravE) me in a web of desire (maruL).

caraNam
nilaiya kAyam ilaiyE idanai
nilayenReNNuvadu enna mAyam
nilaiyenRunnaiyE ninaindu nAn uyya
nEsa kavi kunjaradAsa rasikapriya (aruL seyya…)

This body (kAyam) is not (ilayE) eternal (nilaiya), so what is this (enna) illusion (mAyam) that makes us believe (eNNuvadu) that it (idanai) is permanent (nilaiyenRu)? Oh one who is dear (priya) to the fan (rasika), the loving (nEsa) servant (dAsa), of the poet (kavi) kunjara (bhArati) [2], (you have to bless me, Oh murugA), so that I (nAn) can achieve excellence (uyya) in life by accepting/thinking of you alone (unnaiyE) as the eternal one (nilaiyenRu)!

FOOT NOTES
[1] the word (sol) I think is the praNava – Om
[2] The composer, Sri Koteeswara Iyer was brought up by his maternal grand-father, who was Kavi Kunjara Bharati – Sri KI called himself ‘kavi kunjara dAsan’ – his mudra


உசாத்துணை 

https://www.veethi.com/india-people/koteeswara_iyer-profile-11574-24.htm

https://tamil.wiki/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E2%80%8C

பாடல் இணைப்பு
 
https://youtu.be/Po-pdYDtwCo


https://youtu.be/VKBkzg3dbPw




தாமரைக்கண்ணன் 
புதுச்சேரி 
04.07.2019

Comments